விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையால், விண்வெளிக் குப்பைகளும் அதிகரிக்கின்றன. தற்போது, நாள்தோறும் ஸ்டார்லிங்கின் ஒன்று அல்லது இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.
எதிர்வரும் ஆண்டுகளில் ஸ்பேஸ்எக்ஸ், அமேசானின் குய்பெர், சீன அமைப்புகளினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, வான் இயற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவல் கூறுகையில்,
ஏற்கெனவே மேலே 8,000 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருக்கின்றன. அனைத்துமே பயன்படுத்தப்படுவதால், பூமியின் சுற்றுப் பாதையில் 30,000 மற்றும் சீன அமைப்புகளினால் 20,000 என நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















