சோலைக்குயில் அவைக்காற்று; களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவுவிழா அதன் நிறுவுனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற ‘ஆளுமை’ வகுப்பில் சித்தி பெற்றவர்களுக்கான பயிற்சி சான்றிதழ்களும், பரிசுகளும் நிகழ்வில் வழங்;கப்பட்டன.
தொடர்ந்து கோகிலா மகேந்திரன் எழுதிய மூன்று நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. முதலாவதாக தேன்குயில் நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் சி.ரகுராம்; நிகழ்த்தினார். நூலை பேராசிரியர் சி. சிவலிங்கராஜா வெளியி;ட்டு வைக்க வண. புpதா செ. அன்புராசா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ‘முடிவைத்தொடுவாய் முயன்று’ என்ற சமூக, உளவியல் கல்வியியல் நூலின் வெளியீட்டுரையை வைத்தியர் சி.சிவகலை நிகழ்த்தினார்.
இந்நூலை கவிஞர் சோ. பத்மநாதன் வெளியிட்டு வைக்க உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அபிராமி ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ‘மன நாடக மேடையில்’ நூலின் வெளியீட்டுரையை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். குறித்த நூலை பேராசிரியர் சி. சிவலிங்கராஜா வெளியிட்டு வைக்க பேராசிரியர் க. சிறீகணேசன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சோலைக்குயில் அங்கத்தவர்கள், கல்வியியலாளர்கள், மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

















