ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி பெரும்பாண்மை இழந்ததையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனடிப்படையில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் பாராளுமன்ற கீழவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
இதையடுத்து மேலவையில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்தே, ஜப்பான் நாட்டின் 104 ஆவது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார். இதன்மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெறுகிறார்.
ஜப்பானின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மடலாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


















