ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி,
இந்தியாவில் இருந்து அதிகளவாக 27,786 (19.1% ) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,750 பேரும், நெதர்லாந்திலிருந்து 10,809 பேரும், சீனாவிலிருந்து 5,904 பேரும் மற்றும் பிரான்ஸில் இருந்து 7,732 பேரும் சுற்றுலா பயணிகளாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஜூன் மாதத்திற்கான அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,313,232 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 269,780 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 124,652 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 114,644 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


















