இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 2 ஆவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. சரித் அசலங்கா 45 , தனஞ்செய டி சில்வா 40 ஓட்டமும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ஓட்டங்;கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 75 ஓட்டங்கள் எடுத்தார். ஹாரி புரூக் 42, பென் டக்கெட் 39 ஓட்டமும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து 46.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 223 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
இலங்கை அணி சார்பில் தனஞ்செய டி சில்வா, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜோ ரூட்டுக்கு அளிக்கப்பட்டது.


















