தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தமிழ் பாரம்பரியத்தை கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம்.
இலங்கையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றது. இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் என கருதப்படும் உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்மக்;களின் உயிர்கள் கௌவரத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.
வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது – நடுங்கவைக்கும் கண்டுபிடிப்பாக மாறியது- தொழிலாளர்கள் நிலத்திற்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள்,கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள்,சிறுவர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிகொண்ட பாதிப்புகள் – விளையாட்டுப்பொருட்கள் , புத்தகபைகள்,ஆடைகள் – தெரியவந்துள்ளன.
ஈவிரக்கமற்ற தன்மை ஆழம்காணமுடியாதது.
தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக அறிந்திருந்த விடயங்களை – அதாவது இலங்கையின் உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல்போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை- செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது.
அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் – மௌனமாக்கப்பட்டார்கள் – இரகசியமாக புதைக்கப்பட்டார்கள்.
உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டிய ,பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும- ,நீதிக்கான தேடலில் உறுதியாகயிருக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது.
மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது.


















