தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நாயகர்களான தர்ஷன் – காளி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘ ஹவுஸ் மேட்ஸ்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ அக்கலு சிக்கலு..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ எனும் திரைப்படத்தில் தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ, காளி வெங்கட் , வினோதினி வைத்தியநாதன், தீனா , அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். பேயை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ப்ளே ஸ்மித் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ அக்கலு சிக்கலு..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் மற்றும் ராஜேஷ் முருகேசன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கான இசையும், பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

















