மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற முதியவர் ஒருவரை இராணுவ வீரர்கள் சிலர் இணைந்து காப்பாற்றியுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) பிற்பகல் 02.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
94 வயதுடைய முதியவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த முதியவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.