வடக்கு – கிழக்கு முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பலை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் அடங்கிய குழு இன்யைதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
திருவிழாக்களின்போது, நகைகளை கொள்ளையிடும் நோக்கில் இந்தியாவிலிருந்து வந்த இரண்டு பெண்கள் உள்ளடங்கிய குழுவொன்று, இலங்கைப் பெண்களுடன் இணைந்து செயற்படுவதாக புலனாய்வு தகவல்களுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.















