சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோலிலும் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் ‘படையப்பா’.
இதை பிரபல இயக்குநரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்தார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இதனை ரஜினியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்தார்.
இப்படத்தை கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்தனர்.
தற்போது, இந்தப் படம் கடந்த 3 நாட்களில் ரூ.14.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.














