தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆபிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 139 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் தென் ஆபிரிக்கா 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2 ஆவது போட்டி லாகூரில் நாளை நடக்கிறது.


















