ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்னாபிரிக்கா, மொசாம்பிக், சிம்பாவே போன்ற நாடுகள் அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
ஆதன் ஆப்பிரிக்காவின் இரண்டு வடக்கு மாகாணங்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஹெலிக்கொப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஒரே வாரத்தில் தென்ஆப்பிரிக்காவில் 400 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொசாம்பிக் நாட்டில் மழை பருவநிலைக்கு மாறாக திடீரென பெய்த கனமழை காரணமாக 103 பேர் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கம், வெள்ளத்தில் மூழ்குதல், கட்டிடங்கள் இடிதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மொசாம்பிக் நாட்டின் மத்திய தெற்கு பிராந்தியங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. 2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனால் 10 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிம்பாப்வேயில் 70 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மடாகஸ்கர் நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாலவி மற்றும் சாம்பியா நாடுகளும்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடுமையான வானிலை மனித உயிருக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

















