பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரலையில் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ‘அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் ‘ஆம் நிச்சயமாக’ என பதில் அளித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என பதில் அளித்துள்ளார்.
இஸ்ரேலின் நீண்டநாள் பிரதமராக 1996 ஆம் ஆண்டில் இருந்து நேதன்யாகு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள புதிய பிரதமருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















