அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிட்டவுன் மான்ஹட்டனின் 345வது பார்க் அவென்யுவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நியுயோர்க் பொலிஸின் இரண்டு உத்தியோகத்தர்கள் பணியில் இல்லாதவேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவேளை சுடப்பட்டனர் இரண்டு பொதுமக்களும் தாக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின்றன.
ஒருபொலிஸ் உத்தியோகத்தர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் பொதுமகன ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















