-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்-
-த.சுபேசன்-
சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குள் கைதடி வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ள இடிகுண்டு குளம் நிலத்தடி நீரின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்திற் கொண்டு முழுமையாக தூர்வாரப்பட வேண்டும் என பிரதேசசபை உறுப்பினரும், கைதடி மத்தி கமக்கார அமைப்பின் தலைவருமான க.சிவபாதம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கைதடி தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள கிராய் குளம் கைதடி மற்றும் நாவற்குழி கிராமங்களை நீர்நிலை ஊடாக இணைக்கும் குளமாக உள்ளது. கைதடி தெற்கு நிலத்தடி நீரின் பாதுகாப்பு மற்றும் நாவற்குழி விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்திற் கொண்டு கிராய் மற்றும் இடிகுண்டு குளங்களை முழுமையாக தூர்வாரி புனரமைக்க சாவகச்சேரி பிரதேசசபை, விவசாயத் திணைக்களம் மற்றும் வேள்ட் விசன் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.


















