பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தினால் அடர்த்தியான சனத்தொகை கொண்ட பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
பங்களாதேஷின் அண்டை நாடான இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆனால் இரு நாடுகளிலும் பாரியவில் சேதம் ஏற்பட்டதாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்காவில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீற்றர் (25 மைல்) தொலைவில் உள்ள நர்சிங்டி நகரில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் குலுங்கியமையாலும், சில தற்காலிக கட்டமைப்புகள் இடிந்து விழுந்தமையாலும் நகரவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் போது ஆறு மாடி கட்டிடத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

















