அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ கடற்பகுதி ஊடாக படகில் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு இராட்சத அலை தாக்கியதால் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.
தகவல் அறிந்து கடலோர பொலிஸார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு செல்வதற்கு முன் 4 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


















