-கனகலிங்கம் சபேஸ்-
பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் 3 N காடிக்கும் மேல் பெறுமதியான 100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் அட ங்கலாக 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் ஒழிப்பிற்கான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டி ருந்த சோதனை நடவடிக்கையின்போதே மேற்படி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல்வழி யாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கடற்படை வழங்கியிருந்த, இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந் தனர்.
எனினும் கஞ்சா பொதிகள் அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், க டத்தல் படகுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட் டிருந்த விசாரணைகளின் அடிப்படையில் அவ்வொல்லைப் பகுதியில் உள்ள வீடென்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. இதன்போது குறித்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத் துள்ளனர்.

















