தென், கிழக்கு மற்றும் தென் மத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில்
இன்று வியாழக்கிழமை (31) மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை (30) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அதிகளவு நீரை அருந்தவேண்டும் மற்றும் பணி செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வெப்ப அலைகளின் போது மக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
அதேநேரம் வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோய் நிலையுள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


















