பாக்கிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணம் பாக்தாதி நகரில் 5 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு சனிக்கிழமை (05) அதிகாலை இடிந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
ஆனாலும், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அவர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.