புத்தளம் – லுணுவில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (03) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லுணுவில பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.