உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்கு ரஸ்யாவிற்கு மேலும் பத்து பன்னிரென்டு நாட்கள் காலஅவகாசத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நான் புதிய காலக்கெடுவை விதிக்கப்போகின்றேன் அது 10- 12 நாட்கள் என தெரிவித்துள்ள டிரம்ப் மேலும் காத்திருப்பதற்கு உரிய காரணங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் தாரளமானவர்களாக நடந்துகொள்ள விரும்புகின்றோம் ஆனால் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதை நாங்கள் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


















