இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று ரி-20 தொடரில் 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது ரி-20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
ஸ்மிருதி மந்தனா 80 ஓட்டங்களும் ஷபாலி வர்மா 79 ஓட்டங்களும் குவித்தனர். ரிச்சா கோஷ் 40 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 222 ஓட்டங்;கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கப்டன் சமாரி அத்தபத்து 52 ஓட்டமும் ஹாசினி பெராரா 33 ஓட்டமும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ரி-20 தொடரில் இந்திய அணி 4-0 என கைப்பற்றியது.


















