இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 ரி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் நாணயச்சுழற்சியல் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம்; செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 106 ஓட்டங்;களும் அடித்தனர்.
தொடர்ந்து 338 ஓட்டங்களை இலக்காக கொண்டு இந்தியா துடுப்பாட்டத்தை தொடர்ந்தது. ஆனால் 11 ஓட்டங்களில் ரோகித் சர்மா, 23 ஓட்டங்களில் கப்டன் கில், 3 ஓட்டத்தில் ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஒரு ஓட்டம் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ஓட்டத்துக்குள்; 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5 ஆவது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதி{ம் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜடேஜாவும் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி எளிதில் தோல்வியை தழுவும் என அனைவரும் நினைத்தநிலையில், ஹர்ஷித் ராணா ஆட்டத்தை மாற்றினார்.
சரிவைசென்ற அணியை கோலி-ராணா இணை மீட்டது. கோலி சதம் விளாசினார். ஹர்ஷித் ராணா அரைசதம் கடந்து. 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கோலி 124 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து தரப்பில் ஜகரி ஃபோக்ஸ், கிறிஸ் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேடன் லெனாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.


















