முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.