திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலமானார்.
இவர் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்துள்ளார்.
பி. தயாரத்ன 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2001 முதல் 2004 ஆம் ஆண்டுக்குட்பட்ட காலப்பகுதியில் சுகாதார அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.















