யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவியதையறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர், கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும், கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















