ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான ஒலியாவை தாக்கியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தினை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈரானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த கப்பல் மீது தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆயுதங்கள் இராணுவ தளபாடங்கள் வெடிபொருட்கள் விநியோகத்திற்காக இந்த துறைமுகத்தினை ரஸ்யா பயன்படுத்திவருகின்றது என உக்ரைன் தெரிவித்துள்ளது.













