ராகம, படுவத்தை பகுதியில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்தபோது, படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட நபர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய கூட்டாளியான ‘அமி உப்புல்’ என்ற நபர் என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.