ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்தவர்களில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று முன் தினம் பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது.
ஆபத்தை உணர்ந்த சாரதி பேருந்தை சாலையோரம் நிறுத்திய போதும்; கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. பயணிகள் அலறியடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். இருந்த போதும் 20 பேர் தீப்பிடித்து உடல்கருகி உயிரிழந்ததுடன் ; 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















