இன்றைய போட்டிகள் நிறைந்த சமூகத்தில் இளம் ஆண்களும் , பெண்களும் தங்களது தோற்றப் பொலிவிற்கும், சருமத்தின் நிறத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள்.
அவர்கள் சூரிய ஒளியின் காரணமாக தங்களுடைய சருமத்தின் வண்ணம் பாதிக்கப்பட்டால்… அவர்களுடைய தன்னம்பிக்கையின் அளவு குறைந்து, அவர்களுடைய மனித வளத்தை முழுமையாக பாவித்து கொள்ள இயலாத சூழலுக்கு ஆளாகிறார்கள்.
இந்தத் தருணத்தில் இதுபோன்ற சருமத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு வைத்தியர்களிடம் ஆலோசனையும் , சிகிச்சையும் பெற வேண்டும் என தோல் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சூரிய ஒளி நாளாந்தம் அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்களும், வைத்தியர்களும் பரிந்துரைக்கிறார்கள். இதனால் இன்றைய இளம் தலைமுறை ஆண்களும், பெண்களும் தங்களுக்கு சௌகரியமான தருணத்தில் சூரிய ஒளியிலிருந்து விற்றமின் டி எனும் சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக வெயிலில் பயணிக்கிறார்கள்.
சிலருக்கு இதனால் அவர்களுடைய முகத்தின் சருமத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதனை அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வைத்திய முறைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
ஆனால் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், எதிர்பாராத வகையில் பக்க விளைவை ஏற்படுத்தி விடும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
சருமத்தின் வண்ணத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுடைய சரும பொலிவை நீங்கள் விரும்ப தகாத நிலையில் இருந்தாலோ.. அதற்காக தோல் சிகிச்சை நிபுணரிடம் சென்று ஆலோசித்து, அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளையும், வாழ்க்கை நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.