தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆர்யன்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த டீசருக்கு ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இயக்குநர் பிரவீண் .கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் உளவியல் ரீதியான இலக்கணத்தை மீறிய சீரியல் கில்லரின் குற்றச் சம்பவத்தை பரபரப்பாக விவரிப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

















