வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெனிசுலா நாட்டு கப்பல் மீதே அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டது என்பதை உளவுத்துறை உறுதிப்படுத்தியதையடுத்தே சர்வதேச நீர்நிலைகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


















