பிறப்பு: 05 May 1929
இறப்பு: 03 Jul 2025
சீரணி நாகம்மாள் கோயிலடி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் நேற்று (03.07.2025) வியாழக்;கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா- நன்னிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், மதனகுமார் (லண்டன்), யதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் சந்திரவதனாவின் அன்பு மாமனாரும் ஆதித்தன் (சிங்கப்பூர்), அபிராஜ் (ஊவாவெல்லச பல்கலைக்கழகம்-பதுளை), அஸ்வினா (மாணவி-யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.07.2025) வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி மேற்கு கொத்தத்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்