ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் 21 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.