ஒரு நாள் ஒரு காக்கா ஒரு பாலைவனத்து மேல பயந்துகிட்டு இருந்துச்சு, அப்பனு பார்த்து அதுக்கு ரொம்ப தாகம் எடுத்துச்சு

உடனே தன்னோட போன எடுத்து கூகிள் மேப் ஆண் பண்ணி பக்கத்துல எங்க தண்ணி கிடைக்கும்னு தேடுச்சு, அப்பதான் பக்கத்துலயே ஒரு பழைய கிணறும் அதுல ஒரு ஜாடியில் தண்ணி கொஞ்சமாவும் இருக்குறத பார்த்துச்சு

அடடா தண்ணி கொஞ்சமா இருக்கேனு பார்த்த காக்கா, இந்த தண்ணிய எப்படி குடிக்கிறதுனு யோசிச்சுச்சு உடனே சேட் ஜி.பி.டி ஓப்பன் பண்ணி எப்படி குறுகலான வாய் இருக்குற ஜாடியில இருக்குற தண்ணிய குடிக்குறதுனு கேட்டுச்சு

அப்பத்தான் பக்கத்துல இருக்குற கற்கள் எல்லாத்தையும் எடுத்து உள்ள போட்டு தண்ணி மேல வர வச்சு தன்னோட தாகம் தீத்துக்கிட்ட காக்கையோட கதை வந்துச்சு அத படிக்கிற அளவுக்கு பொறுமை இல்லாத காகம் னு யூடுப் ஷார்ட்ஸ் போட்டு தேட ஆரம்பிச்சுச்சு

குட்டி மோட்டார் போட்டு தண்ணிய பம்ப் பண்ணி வெளியில எடுத்து குடிக்கிறது, தண்ணிய தொடாமலே மேனிபெஸ்ட் பண்ணி தண்ணி வெளியில அதுவாவே வர வைக்குறதுனு நிறய ஷார்ட்ஸ் வந்துகிட்டே இருந்துச்சு, ஆர்வமான காக்கா ரொம்ப தீவிரமா மேனிபெஸ்ட் பண்ணி எப்படி தண்ணிய வெளியில எடுக்குறதுனு எல்லா ஷார்ட்ஸையும் பார்க்க ஆரம்பிச்சுச்சு

அத பார்த்து பக்கத்துல இருக்குற மணல்ல எனக்கு தண்ணி வேணும்னு எழுதி வச்சிட்டு வாய தொறந்து உக்காந்துகிடுச்சு
ரொம்ப நேரம் ஆகியும் எதுவுமே நடக்கல பொறுமை இழந்த காக்கா பேசாம பழைய காக்கா செஞ்ச மாதிரி பக்கத்துல இருக்குற கல்லு எல்லாத்தையும் தூக்கி பத்திரத்துக்குள்ள போட்டு தண்ணிய மேல கொண்டு வரலாம்னு தோணுச்சு

உடனே பக்கத்துல இருக்குற கல்ல எடுக்க போனப்பத்தான் இது நல்ல கல்லா இல்ல இதுல அசுத்தமான பாக்டீரியா எதாவது இருக்குதான்னு சந்தேகம் வந்துச்சு உடனே கூகிள் லென்ஸ்ல அந்த கல்ல போட்டோ எடுத்து தேட ஆரம்பிச்சுச்சு
அதுல நிற பாக்டீரியாவ பத்தி வந்துகிட்டே இருந்துச்சு, அதுல ஒரு டாக்டர் பாக்டீரியா காரணமா செமிக்கிற தன்மை எப்படி பாதிக்க படுதுனு நிறைய பேச ஆரம்பிச்சாரு.

போர் அடிச்சு போன காக்கா அடுத்த வீடியோ பாக்க ஆரம்பிச்சுச்சு, அதுல கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி சுத்தம் இல்லாத கற்களை குடிக்கிற தண்ணி இருக்குற இடத்துல குவிச்சு வச்சு எல்லாரையும் முட்டாளாக்குறாங்கனு போட்டு இருந்துச்சு.

அத பார்த்த காக்காய்க்கு ரொம்ப பயம் வந்துடுச்சு அப்பத்தான் லேசா மலை பெய்ய ஆரம்பிச்சுச்சு, அடடா மழை வருதே இப்ப எப்படி மழை வருதுன்னு வெதர் ஆப்ப ஒப்பன் பண்ணி பார்த்துச்சு, அதுல இன்னைக்கு மழை வரதுக்கு வாய்ப்பே இல்லைனு போட்டு இருந்துச்சு.

சந்தேக பட்ட காக்கா பேஸ்புக்ல லைவ் டெலிகாஸ்ட் பண்ணி நண்பர்களே இந்த இடத்துல இப்ப மழை வர்றதுக்கான சாத்தியமே இல்ல ஆனா மழை பெய்யுது இது எதனாலன்னு கேட்டுச்சு, வீட்டுல சுகமா உக்காந்துகிட்டு இருந்த மத்த பறவைங்க அது இயற்க்கையோட மாறுதல் மாற்றம் ஒன்றே மாறாதது, மாறுதலுக்கு நாம மாறித்தான் ஆகணும். முன்ன மாதிரி இடி இடிச்சு, குளிர் காற்று வீசி மழை பெய்யுற காலம் எல்லாம் மலையேறி போச்சு, அதனால நீ அந்த தண்ணிய குடிக்காத அதுல எதாவது கான்செர் வர வைக்குற கெமிக்கல் கலந்து இருக்கலாம்னு சொல்லுச்சுங்க

இத கேட்ட காக்கா ரொம்ப பயந்து போச்சு அப்பத்தான் அதோட போன் 5g பிளான் தீர்ந்து போக இன்னும் 200 mb தான் மிச்சம் இருக்குனு மெசேஜ் வந்துச்சு இனிமே இதையும் தீர்த்துட்டா ராத்திரிக்கு என்ன பண்றதுனு யோசிச்சு அந்த முயற்சியை கைவிட்டுடுச்சு

அப்பத்தான் மழை தண்ணி விழுந்து பக்கத்துல இருந்த பாத்திரம் நிரம்பி வலியுறத பார்த்துச்சு இருந்தாலும் அத குடிக்க ரொம்ப தயக்கமா இருந்துச்சு காக்கைக்கு கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு பக்கத்துல இருக்குற மோட்டார் ஸ்விட்ச்சு கண்ணுக்கு பட்டுச்சு மெதுவா அத ஆண் பண்ணுச்சு காக்கா, மோட்டார் ஓடி நல்ல குடிக்கிற தண்ணி குழாய் வழியா வர ஆரம்பிச்சுச்சு

அத குடிக்க போறதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம் வந்துச்சு, காக்கைக்கு இத பார்த்து நாம ரெசெர்ச் பண்ணவே இல்லையேன்னு தோணுச்சு

அப்பத்தான் தன்னோட போன்ல நிறய ரெசெர்ச் பேப்பர் டவுன்லோட் செஞ்சு வச்சிருக்குறது ஞாபகத்துக்கு வந்துச்சு, அத எடுத்து படிச்சா காக்காவுக்கு உண்மையான அறிவியல் அறிஞர்கள் சொல்லுற விஷயங்களுக்கும் மேம்போக்கா படிச்சிட்டு ரீல்ஸ், ஷார்ட்ஸ், லைவ் போடுறவங்களுக்கும் இருக்குற வித்தியாசம் புரிஞ்சிச்சு, உடனே அந்த தண்ணிய எடுத்து தாகம் தீர குடிக்க ஆரம்பிச்சுச்சு

அப்பத்தான் தாகமா இருக்கிறப்ப எப்படி தண்ணி குடிக்கணும்னு ஒரு வீடியோ ஓட ஆரம்பிச்சுச்சு, அதுல தாகமா இருக்கிறப்ப மொடக்கு மொடக்குனு தண்ணி குடிக்க கூடாது, மெதுவா ஒவ்வொரு சோட்டா குடிக்கணும்னு சொல்ல ஆரம்பிச்சாங்க ஆனா தெளிவான பாதையில இருந்த காக்கா தண்ணிய தன்னோட இஷ்டப்படி குடிச்சிகிட்டே அந்த வீடியோவுக்கு டிஸ்லைக் போட்டுட்டு அடுத்த வீடியோ பார்க்க ஆரம்பிச்சுச்சு.

















