அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார்.
வோசிங்டனின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை மீறி டிரம்ப் இவ்வாறு செயற்படுவது குறித்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.
வோசிங்டனில் சட்டஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நகரத்தை மீட்பதற்கு தனது நடவடிக்கைகள் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எங்கள் தலைநகரத்தை நாங்கள் மீளப்பெறப்போகின்றோம் குடிசைகளை இல்லாமல் ஆக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயககட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஏனைய நகரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் சிக்காக்கோவிற்கும் இது நடக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
டிரம்பின் நடவடிக்கை சட்டவிரோதமானது என வோசிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















