இந்தியா மற்றும் இலங்கையில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக்கிண்ண கிரிககெட் போட்டிக்கு ஆபிரிக்கத் தகுதிச் சுற்றின் மூலம் சிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்தத் தொடருக்கு மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. தற்போது வரை மொத்தம் 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கான தகுதிச் சுற்றுகள் விரைவில் முடிவடையும்.
2026 டி – 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தகுதி பெற்ற அணிகளின் விவரங்கள் :

போட்டியை நடத்தும் நாடுகளின் (Hosts) அடிப்படையில் இந்தியா, இலங்கை ஆகியன தகுதி பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டு டி – 20 உலகக்கிண்ண சூப்பர் 8 அணிகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான், அவுதிரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய தகுதி பெற்றுள்ளன.
ஐ.சி.சி டி – 20 அணிகளின் தரவரிசை மூலம் அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் கனடா (அமெரிக்க தகுதிச் சுற்று), இத்தாலி (ஐரோப்பா தகுதிச் சுற்று), நெதர்லாந்து (ஐரோப்பா தகுதிச் சுற்று), நமீபியா (ஆபிரிக்க தகுதிச் சுற்று), சிம்பாப்வே (ஆபிரிக்க தகுதிச் சுற்று ) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 3 இடங்கள் கிழக்கு ஆசியா-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்றின் முடிவில் பூரணப்படுத்தப்படும்.
















