குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு எதிராக பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை கொழும்பு மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் எந்த பிழைகளும் இல்லை எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.