அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ரிவர் நார்த் பகுதியில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி புதன்கிழமை (02) இரவு சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
வாகனத்தில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வீதியெல்லாம் அழுகுரலாகவும், இரத்தம் வழிந்தோட மக்கள் அலறியபடியும் நாலாபுறமும் ஓடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பாவத்தில் 2 பெண்களும் 2 ஆண்களுமாக 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணையில், 13 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது.