காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த இடத்தை விட்டு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால் ஒரு காவலர் இயந்திர துப்பாக்கியால் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர் ஒருவர் நிலத்தில் விழுந்தார் அசையாமல் தரையில் விழுந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ஒப்பந்ததாரர் ‘அடடா நீங்கள் ஒன்றைப் பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார். பின்னர் அவர்கள் அதைப் பற்றி சிரித்தனர்என அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு தகவல்வழங்கிய நபர் காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் நான்கு இடங்களில் பணியாற்றியவர் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது கட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்களிற்கு அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவிலலை என பிபிசிக்கு தெரிவித்துள்ள அந்த நபர் அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டால் முதலில் சுடுங்கள் பின்னர் கேள்வி கேளுங்கள் என குழுத்தலைவர் ஒருவர் தனது குழுவிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் காசாவில் பணிபுரிகின்றோம் இங்கு விதிமுறைகள் இல்லை நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது போன் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் அந்த இடத்திலிருந்து விலகி சென்றாலோஆபத்தான நோக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலே நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோம் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தோம் நாங்கள் தவறிழைத்துள்ளோம் அலட்சியமாக இருந்துள்ளோம் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தளத்திலும் அந்தப் பகுதியில் நடக்கும் நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் கண்காணித்து வருவதாகவும் அங்கு யாரும் காயமடையவில்லை அல்லது சுடப்படவில்லை என்றுஎன மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் காசா மனிதாபிமான பவுண்டேசன் தெரிவிப்பது “முற்றிலும் நிர்வாணப் பொய்”.என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
குழுத் தலைவர்கள் காசா மக்களை ஜொம்பிகூட்டங்கள் “” என்று குறிப்பிட்டனர் இந்த மக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறினர்” என்று கூறினார். என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனியர்கள் பலமுறை கடுமையாக காயமடைந்ததாகத் தோன்றிய பல சந்தர்ப்பங்களை தான் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் பெப்பர் ஸ்பிரே தாக்குதலிற்குள்ளானார்.ஸ்டன் கையெறி குண்டின் உலோகப் பகுதியால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார்.அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த உலோகத் துண்டு அவரது தலையில் நேரடியாகத் தாக்கியது அவர் அசையாமல் தரையில் விழுந்தார். “அவள் இறந்துவிட்டாளா என்று எனக்குத் தெரியவில்லை. அவள் மயக்கமடைந்து முற்றிலும் முற்றிலும் எழ முடியாத நிலையில் காணப்பட்டாள் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.