காட்டு யானைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால், அவைகளுக்கு சிகிச்சை அளிக்க வன விலங்கு வைத்தியசாலை மற்றும் நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பத்திரண தெரிவித்தார்.
பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த யானையை பார்வையிட சென்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டினால் யானையின் வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
களுந்தாவை வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தேவையான பராமரிப்பு, உணவு மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது யானை முன்னங் காலைப் பயன்படுத்தி லேசான அசைவுகளைச் செய்து வருகிறது. முந்தை நிலையுடன் பார்க்கையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் உட்பட யானையின் சிகிச்சையை விரைவுபடுத்த தேவையான அனைத்து வசதிகளையும் விரைவுப்படுத்துமாறு அமைச்சர் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.