செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
லைபீரிய கொடியுடன் 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கிரேக்கத்தை சேர்ந்த எட்டேர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது சிறிய படகுகளில் இருந்து ஆர்பிஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்கிழமை முழுவதும் இந்த தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலையே தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ள யேமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் 21 பிரஜைகளை கைதுசெய்துள்ளனர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஸ்ய பிரஜையொருவருக்கு காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரே வாரத்தில் இரண்டு வர்த்தக கப்பல்களை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.