நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த 4 ஆம் திகதி இப்போட்டி தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியல் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 334 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 511 ஓட்டங்;கள் எடுத்தது.
177 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது .
அவுஸ்ரேலியா தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மைக்கேல் நேசர்.
தொடர்ந்து இரண்டாவது இகிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 65 கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ஓட்டங்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.
ஸ்மித் 23 ஓட்டங்கள், ஹெட் 22, வெதரால்ட் 17, லபுஷேன் 3 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2-0 என அவுஸ்திரேலியா இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி வரும் 17 ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

















