-விரக்தியின் உச்சத்தில் டிரம்ப்-
ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தத்தில் தொடர்ந்து இழுபறி நிலை காணப்படுவதால் விரக்தியின் உச்சத்தில் டிரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக ரஷிய ஜனாதிபதி புதின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை. அண்மையில் அமெரிக்க குழுவினர் ரஷிய ஜனாதிபதி புதினை சந்தித்து பேசினர்.
அதேபோல் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இரு தரப்பினரும் முரண்டு பிடிப்பதால் அமைதி ஒப்பந்தத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரக்தி அடைந்துள்ளனர். இதில் அவர் ரஷியா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கூட்டத்தில் அவர்கள் என்ன ஆலோசிக்க போகிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

















