நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய நகை கடையில் இருந்து புகழ்பெற்ற ஃபேபர்ஜ் முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பச்சை நிறப் பதக்கம் ஒன்றை திருட முயற்சி நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 32 வயது நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பச்சை நிறப் பதக்கத்தை திருடும் நோக்கத்துடன் விழுங்கியதை அடுத்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் US$ 20,000 மதிப்புள்ள இந்த அழகிய ஆபரணம் திருடனின் செரிமான உறுப்புகளில் இருந்து இயற்கையாக வெளியேறும் வரை காத்திருப்பதாகவும், இந்த வித்தியாசமான பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















