சொர்ணலிங்கம் வர்ணன்
தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாண கடற் றொழிலாளர்களை சந்தித்து இந்திய மீனவர் அத்துமீறளை தடுப்பதற்க்கு உறுதியான வத்தரவாதம் வழ ங்கவேண்டும் என கூறியுள்ள இலங்கை கடற்றொழில் சமாசத்தின் அமைப்பாளர், என்.பி.சுப்பிரமணியம்,
இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், இந்திய – இலங்கை மீனவர் விவகாரம் தொடர்பா க பேசி களைத்துவிட்டோம். தூதரகங்கள், அரசாங்கங்கள் என தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத் தும் எந்தவொரு பயனும் எமக்கு கிட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
இவ்வாறான சூழுலில் எமது கடற்றொழிலாளர்கள் அன்றாடம் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் கள், அன்றாடம் வாழ்வாதார நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்போதும் யாரும் க ண்டு கொள்வதாக இல்லை. ஆனால் மறுபக்கம்,
இந்திய இழுவை படகுகள் தாராளமாக எங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து மின்பிடித் தொழிலில் ஈ டுபடுவதுடன், கரைக்கு அண்மையாக வந்து தொழில் செய்வதையும் காண்கிறோம். குறிப்பாக வடமராட் சி கிழக்கு கரையை தொடும் அளவுக்கு வருகின்றனர்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்திய இழுவை படகுகளை கடற்படையினர் கைது செய்கின்றபோது ம், பெருமளவான இழுவை படகுகள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றன. இதனால் கடல் எமக்கானதா? என் ற கேள்வியும் எழுகின்றது. ஜனாதிபதி பதவியேற்று
ஒருவருடம் நிறைவடையும் நிலையில், ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணம் வருகைதந்துவிட்டார். ஆனால் இந்திய மீனவர் அத்துமீறல் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. குi றந்தபட்சம் கடற்றொழிலாளர்களை சந்தித்து பேசுவும் இல்லை.
எம்மை சந்திக்க கூடாது என இந்தியா அழுத்தம் கொடுக்கிறதா? என ஜனாதிபதியிடம் கேட்க விரும்பு கிறோம். அதேபோல் டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளு ம் கூட வழங்கப்படவில்லை. அனர்த்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட
மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வடமாகாண மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரி வித்த நிலையிலும் எமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஆகவே வடக்கிற்கு வரும் ஜனாதிபதி மீன வர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்குவதற்குரிய
நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இந்தியா அத்து மீறிய மீன் பிடி தொடர்பில் எமது ஆதங்கங்க ளை முன்வைப்பதற்கு மீனவ சமூகத்தை சந்திப்பதற்கு உரிய ஏற்பாடுகளை உரியதரப்பினர்கள் மேற் கொண்டு தர வண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்டத் தலைவர் இ.முரளிதரன் கூறுகையில், ஜனா திபதி தேசிய பொங்கல் விழாவுக்காய வடமாகாணம் வருகிறார். ஆனால் வடக்கு மீனவர் பிரச்சிi னகளுக்கு தீர்வில்லை. வடமராட்சி கிழக்கில் இந்திய இழுவை படகுகள் சுதந்திரமான
தொழிலில் ஈடுப ட்டிருக்கின்றன. கடற்படை தளத்திற்கு அருகில் வந்து நிற்கிறார்கள். எங்கள் வளங்க ளை, வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள். எங்களால் வேடிக்கை பார்க்க மட்டும்தான் முடிகிறது. இலங்i க கடற்படை அவர்களை கைது செய்யாதது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.
முல்லைத்தீவு – வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவு மீன் பிடிக்கும் காலம் இது, இப்போது அவர்கள் எல்லாவற்றையும் அள்ளி சென்றால் எமக்கு மிஞ்சப்போவது என்ன? இவ்வாறான நி லை யிலேயே தேசிய பொங்கல் விழா கொண்டாடுவதற்காக ஜனாதிபதி வடமாகாணத்திற்கு வருகிறார்.
அவர் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுவார். ஆனால் எமக்கு மகிழ்ச்சி இல்லை என்றார்.


















