புதிய கல்வி சீர்த்திருத்தம் மூலம் ஏற்பட்ட தவறுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவி விலக வேண்டும் என சிறுவர்களுக்கான வளர்ந்தோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்தச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவொரு அறிவியல் அடிப்படையும் இன்றி முன்வைக்கப்பட்டுள்ள கல்வி சீர்த்திருத்தம் மீளப் பெறப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை கல்வி அமைச்சுக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.


















