பொதுவாக கறிவேப்பிலையில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
ஆனால், நம்மில் பலரும் உண்ணும்போது கறிவேப்பிலையைக் கண்டால் அதை ஒரு ஓரமாக ஒதுக்கிவிடுவோம்.
ஆனால், உண்மையில் கறிவேப்பிலை உண்பது உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.

இதில் இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி, பி2, சி, கல்சியம் போன்றவை உள்ளன.
கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பொஸ்பரஸ், புரதம், தாது போன்றவையும் நார்ச்சத்து, விட்டமின், மினரல் போன்றவையும் உள்ளடங்கியுள்ளன.
கறிவேப்பிலையை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும். பசியின்மை நீங்கும்.
நீரிழிவு நோயாளிகள் காலை, மாலை என தலா பத்து கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.



















