அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலை 342 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 331.22 ரூபாயில் இருந்து 332.38 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 341.04 ரூபாயில் இருந்து 342.08 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய மற்றும் கனேடிய டாலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் தொகுப்பிற்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

















